கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்க்க கூடாததை பார்த்த குழந்தைகள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

arrest

கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த குழந்தைகளை தாய் அடித்து சித்திரவதை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அம்முகுட்டி. இந்த தம்பதிகளுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று(ஏப்ரல் 11) சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அம்முகுட்டி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை குழந்தைகள் நேரில் பார்க்கவே, ஆத்திரமடைந்த அம்முகுட்டி தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய சந்தோஷ், குழந்தைகளின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகளிடம் இதுகுறித்து விசாரித்த போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஆத்திரமடைந்த சந்தோஷ் மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் மீது போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தகாத உறவுக்காக பெற்ற தாயே தனது குழந்தைகளை தக்கிய சம்பவம் பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: குறைந்த இரத்த அழுத்தம் உடலில் என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Next Post

மூடநம்பிக்கையின் உச்சம்.. பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்..! நாடு எங்கே போகுது..

Wed Apr 15 , 2026
The height of superstition.. Parents left a snake-bitten boy floating in the Ganges for 12 hours..!
collage down 1776132889

You May Like