தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.. அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய இபிஎஸ் “ இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசு.. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூட சந்திக்கா முதல்வர் ஸ்டாலின் ஓட்டுக்காக மட்டும் மக்களை தேடி வருகிறார்..
விவசாய விரோத ஆட்சி செய்து, மக்கள் விரோத ஆட்சி செய்யும் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டுமா? நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்காக ரூ.11,600 கோடி மத்திய அரசு கொடுத்தது.. ஆனால் அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கியது.. காவிரி பிரச்சனைக்கு அதிமுக ஆட்சியில் தீர்வு காணப்பட்டது..
ஆனால் திமுக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை.. காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட அரசு அதிமுக அரசு. டெல்டா மாவட்ட நலன்களுக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்.. திமுக அரசு அப்படி ஏதாவது செய்ததா?
அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்ததாக ஸ்டாலின் எப்போதும் பேசுகிறார்.. திமுகவும் பாஜக உடன் தான் கூட்டணி வைத்தீர்கள்.. 1999 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.. அப்போது முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தார். 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி அமைந்தது..
கருணாநிதி வாஜ்பாயை காக்கா பிடித்து கூட்டணி வைத்தார்.. திமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கூட்டணி கிடையாது.. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கூட்டணி..
இன்று அதிமுக, பாஜக, அமமுக, பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி. திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது.. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.. ஆனால் மத்தியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது திமுக தமிழகத்திற்காக என்ன திட்டங்களை கொண்டு வந்தது..? தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை பெற்று தந்தார்களா?
ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது நாங்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் பாஜக அரசு நிறைவேற்றி தந்தது.. இப்போது இருக்கும் திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை.. அதனால் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்திருந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றிருக்கலாம்.. திமுக அரசால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பல திட்டங்கள் கிடைக்கவில்லை..
கண்ணில் பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி ஒரே கட்சி திமுக கட்சி.. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை ஊழலில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி கொள்ளையடித்தார்கள்.. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.. கனிமொழியும், ஆ. ராஜாவும் 2ஜி வழக்கில் சிறையில் இருந்தார்கள்.. இவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதி இல்லை.. என்னை பற்றி பேசினால் தான் செய்திகளில் வர முடியும் என்று பேசுகின்றனர்..
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைண்டுள்ளது.. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.. அதிமுக ஆட்சி அமைந்ததும் கஞ்சா விற்பனை அடியோடு ஒழிக்கப்படும்.. இந்த தேர்தல் தான் திமுகவுக்கு கடைசி தேர்தல்..” என்று தெரிவித்தார்..
Read More : “ஜோசப் விஜய் முதலில் நல்ல கணவனாக, குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்..” மீண்டும் விளாசிய நயினார்..!



