தவெகவில் கருப்பு ஆடு.. பணம் வாங்கி கொண்டு துரோகம் செய்துவிட்டார்..! மனம் நொந்து பேசிய ஆதவ் அர்ஜூனா..

a1775

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.


அந்த வகையில், எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் இருவருமே வேட்புமனுவை முழுமையாக நிரப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் பின்வாங்கிய விவகாரத்தில் அதிமுக இருப்பதாக தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், வில்லிவாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திம் மோகன் வாக்குக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார். நாங்கள் பணம் கொடுக்க போவதில்லை. வில்லிவாக்கம் தொகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர்.

அதேபோல் ஜனநாயகன் அரசியல் படம் கிடையாது. அரசியலே இல்லாத ஒரு படத்தை வேண்டுமென்றே தடுத்திருக்கிறார்கள். பாஜக, திமுக சேர்ந்து கொண்டு விஜய்யை தடுக்க முயற்சிக்கிறார்கள். திமுக பெயரளவில் தான் பாஜகவை எதிர்க்கிறது. நேரு, வேலு, செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள போது, ஏன் இதுவரை ரெய்டு நடத்தப்படவில்லை.

எடப்பாடி தொகுதிக்கான தவெக வேட்பாளர் ஒரு கருப்பு ஆடு. எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக் கொண்டு அந்த கருப்பு ஆடு, உடனடியாக அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டது. இது ஒரு தவறான அரசியல்.. வேட்பாளரை காசு கொடுத்து தூக்குவது ஜனநாயகமற்ற அரசியல். எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு அந்த தொகுதியில் தவெக பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: அடுத்த 10 ஆண்டுகள் முழங்கால் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க..

English Summary

The black sheep on TVK.. Edappadi betrayed Palaniswami by taking money..! Aadhav Arjuna

Next Post

Flash: பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே காலமானார்..!

Sun Apr 12 , 2026
Flash: Legendary playback singer Asha Bhonsle passes away..!
Asha Bhonsle passes away

You May Like