உலகின் மிகப் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் தினசரி உரையாடலை இன்னும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம், அதன் தாய் நிறுவனமான மெட்டா மேற்கொண்டு வரும் பெரிய AI திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த புதிய அப்டேட்டின் முக்கிய அம்சம், Meta AI நேரடியாக வாட்ஸ்அப்பிற்குள் இணைக்கப்பட்டிருப்பதுதான். இதனால், முன்பு போல வேறு ஆப்ஸ்களுக்கு செல்லாமல், அதே அரட்டையிலேயே பல வேலைகளைச் செய்யலாம். இதன் மூலம், பயனர்கள் செயலியை விட்டு வெளியேறாமல், நண்பருக்கு அனுப்பும் புகைப்படத்தில் தேவையற்ற பொருட்களை நீக்கலாம், பின்னணியை மாற்றலாம், கவர்ச்சியான எஃபெக்ட்கள் சேர்க்கலாம். இவை எல்லாம் WhatsApp-ஐ விட்டு வெளியே போகாமல் செய்ய முடியும். இதனால், Instagram போன்ற ஆப்ஸ்களுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.
மேலும், “என்ன மெசெஜ் செய்வது?” என்று யோசிப்பது இப்போ தேவையில்லை. புதிய “Writing Assist” அம்சம் மூலம் நீங்கள் எழுத நினைப்பதை AI சரியாக வடிவமைத்து தரும். சுருக்கமாக, தெளிவாக பதில் உருவாக்கும், உரையாடலுக்கு ஏற்ற வார்த்தைகளை பரிந்துரைக்கும். அதே நேரத்தில், end-to-end encryption மூலம் தனியுரிமை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதலாக, iOS சாதனங்களில் அரட்டை பரிமாற்றம் வசதி மற்றும் ஒரே சாதனத்தில் பல கணக்குகளை பயன்படுத்தும் ஆதரவு போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அன்றாட தகவல் தொடர்பு செயலிகளில் AI-யை ஒருங்கிணைக்கப் போட்டியிடும் நிலையில், வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சங்கள் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
Read more: கோர விபத்தில் 6 பேர் பலி.. திருமணம் ஆன கொஞ்ச நேரத்தில் இப்படியா ஆகனும்..! பெரும் சோகம்..



