சொத்தை பல் வலியை உடனே போக்கும் அற்புத வைத்தியம்..! தினமும் பராமரிப்பது எப்படி..?

Teeth 2026

முறையாக பல் துலக்காதது மற்றும் அதிகளவு இனிப்பு பண்டங்களை உண்பது போன்றவற்றால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பற்களை சிறுகச் சிறுக அரித்து கருப்பு புள்ளியாகத் தொடங்கி, நாளடைவில் பெரிய குழியாக மாறி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது பல்லில் கூச்சம் ஏற்படுவது, பற்களின் உணர்திறன் அதிகரிப்பது, இனிப்பு சாப்பிடும்போது தாங்க முடியாத வலி உண்டாவது ஆகியவை பல் சொத்தையின் முக்கிய அறிகுறிகளாகும். பலர் சொத்தை ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் சென்று பல்லை பிடுங்கி விடுகின்றனர்; ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்தால் இயற்கை முறையிலேயே சொத்தையை சரிசெய்து பற்களை பாதுகாக்க முடியும்.


குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் இந்தப் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. பல் சொத்தையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே, தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளை பற்பசை கொண்டு பல் துலக்குவதை கட்டாயமாக்க வேண்டும். காலையில் பல் துலக்கிய பின்னர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, இரண்டு நிமிடங்கள் வாயை நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இது சொத்தை பகுதியில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை உடனடியாக அழிக்க உதவும்.

சொத்தை பல்லில் இருந்து முழுமையான நிவாரணம் பெற கடுக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காயை வாங்கி தோல் நீக்கி பொடித்தோ அல்லது கடுக்காய் பொடியாகவோ பயன்படுத்தலாம். இரவு பல் துலக்கிய பிறகு, இந்த கடுக்காய் பொடியை சொத்தை உள்ள இடத்தில் வைத்து நன்றாக அழுத்தி, 10 நிமிடங்கள் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர பல் சொத்தை படிப்படியாக குணமாகும்.

மேலும், தாங்க முடியாத பல் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்க சொத்தை உள்ள இடத்தில் கிராம்பு அல்லது கிராம்பு பொடியை வைக்கலாம். தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும், காலையில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் (Oil Pulling) செய்வதும் பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்தி பல் சொத்தை வராமல் நீண்ட காலம் பாதுகாக்கும்.

Read More : ஊழல் செய்தால் இதுதான் கதி..!! பாரபட்சமே பார்க்க மாட்டோம்..!! அமைச்சர் நிர்மல்குமார் எச்சரிக்கை..!!

Next Post

அடேங்கப்பா.. ஒரு டூத் பிரஷின் விலை ரூ.47,000..!! அப்படி என்ன ஸ்பெஷல்..!! AI, அதிநவீன கேமரா வேற இருக்கா?

Mon Sep 7 , 2026
உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது. பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை […]
Tooth Brush 2026

You May Like