சென்னையில் இன்று பிரச்சாரம்.. விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது! – என்.ஆனந்த் வேண்டுகோள்..

tvk vijay n

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் பெரம்பூரில் இருந்தே தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.. போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 6-ம் தேதி போலீசார் அனுமதி கொடுத்தும் வில்லிவாக்கம், தி.நகர் பிரச்சாரத்தை ரத்து செய்தார். அதே போல் ஏப்ரல் 7-ம் தேதி போலீசார் அனுமதி கொடுத்தும் சைதாப்பேட்டையில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார். அதன் பின்னர் காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார். அடுத்தடுத்து கடலூர், கும்மிடிப்பூண்டி பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது தவெகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் விஜய் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். மாலை 4 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை கடைபிடிக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும், குறிபிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியிருந்தார்.

Read more: இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்..? BCCI முக்கிய முடிவு..

English Summary

Campaigning in 3 places in Chennai.. Don’t follow Vijay’s vehicle..! – N. Anand’s instructions

Next Post

அமேசான் கிடங்கில் ஊழியர் பலி.. யாருமே கண்டுக்கல.. 'வேலையை தொடருங்கள்' மேலாளரின் சர்ச்சை உத்தரவு..!

Wed Apr 15 , 2026
Amazon worker dies on warehouse floor; colleagues continue working around his body
amazon india

You May Like