வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக ஏப்.21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சென்னையில் இருந்து 10,663 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வரும் 21 முதல் 23ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 5,089 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் மற்றும் கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயங்கும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர் மற்றும் பெங்களூரு மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in அல்லது TNSTC Official App மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த புகார்கள் அல்லது தகவல்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read more: இல்லத்தரசிகளே.. அரிசியை ஊறவைக்காமல் மொறுமொறுப்பான தோசையை உடனே செய்யலாம்! எப்படி தெரியுமா..?



