“மகளிருக்கு எதிராக வாக்களித்த திமுகவுக்கு பெண்கள் வாக்களிக்க கூடாது..” அண்ணாமலை ஆவேசம்..!

Annamalai K BJP

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகீறது.. இந்த முறை நடிகர் விஜய் புதிதாக தேர்தலில் களம் காண உள்ளதால் அவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. 


அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முயன்றார் பிரதமர் மோடி.. தமிழ்நாட்டின் எம்.பிக்களின் எண்ணிக்கையை 59ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தார்.. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்கடித்துள்ளது..

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுகவுக்கு பெண்கள் வாக்களிக்க கூடாது.. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை திட்டமிட்டு திமுக தோற்கடித்துள்ளது.. 1973-ல் தமிழ்நாட்டிற்கு கூடுதல் எம்.பிக்கள் வேண்டாம் என்று கூறியவர் கலைஞர் கருணாநிதி. 2026-ல் தமிழ்நாட்டிற்கு கூடுதல் எம்.பிக்கள் வேண்டாம் என்று தற்போது கூறுகிறார் மு.க ஸ்டாலின்.” என்று தெரிவித்தார்..

Read More : “நாக்கு இருக்குன்னு பேசாதீங்க.. அசிங்கமா போயிடும்..” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!

RUPA

Next Post

தமிழர்கள் யாருன்னு அவர்களுக்கு தெரியல.. தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழியை பாஜக, RSS ஆல் தொடக்கூட முடியாது.. வெளுத்து வாங்கிய ராகுல்காந்தி ..!

Sat Apr 18 , 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து […]
rahul gandhi

You May Like