Gift உடன் கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி..!! சாகசங்களை கண்டு ரசித்த முதல்வர் விஜய்..!!

CM Vijay 2026 1

2023, 2024, 2025ம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.


இந்நிகழ்வில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கினார். 665 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர், கடலோர காவல்நிலையங்களின் கண்காணிப்பு பணிக்காக வாகனங்கள் வழங்கும் நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்ட 96 பைக்குகள் மற்றும் 42 ஜீப்களும் அணிவகுத்து சென்றன. இதைத் தொடர்ந்து, காவல்துறையில் மோப்பநாய் சாகச நிகழ்வு நடந்தது.

முதல்வர் விஜய்க்கு மோப்ப நாய் ராக்கி பூங்கொத்து கொடுத்து மரியாதை செலுத்தியது. பதிலுக்கு முதல்வரும் சல்யூட் அடித்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். மோப்பநாய்களின் சாகச நிகழ்வை கண்டு ரசித்தார். பின்னர், தீவிரவாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி, காவலர்களின் பைக் சாகச நிகழ்வு ஆகியவற்றையும் முதல்வர் விஜய் கண்டு ரசித்தார்.

Read More : CM விஜய்க்கு கடும் எதிர்ப்பு..!! ஜனநாயகன் படம் நிறுத்தம்..!! தியேட்டர்களில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!!

Next Post

கட்சி நிதி பேரில் லஞ்சம்..!! முதலீடு வராததற்கு காரணமே இதுதான்..!! விளாசிய அமைச்சர் அருண்ராஜ்..!!

Fri Jul 31 , 2026
கடந்த ஆட்சி காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழகத்திற்கு வரவேண்டிய பன்னாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எந்தவொரு திட்டம் தொடங்கப்பட்டாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதே […]
Minister Arunraj 2026

You May Like