5 பேர் உடல் சிதறி பலி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மற்றவர்களின் நிலை என்ன..?

blast 1712152099

விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்விபத்து, பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில் மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.

Read more: தேவாலயத்தில் முழங்காலிட்ட படியே பிராத்தனை செய்த விஜய்..! திருச்சி ரோட் ஷோ நடுவே வேண்டுதல்..!

English Summary

5 people died in a massive explosion at a fireworks factory..! What is the condition of the others..?

Next Post

அட்சய திரிதியை இரவில் அரிய யோகம்..! இந்த ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட்.. பணம் கொட்டும்..!

Sun Apr 19 , 2026
அட்சய திரிதியை என்பது ‘அழியாதது’, ‘குறையாதது’ என்று பொருள்படும். இன்றைய தினம் அனைத்து நாட்களிலும் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. எனவே, அட்சய திரிதியை அன்று நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலும் நிச்சயம் முழுமையான வெற்றியைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும், இன்றிரவு கிரகங்களின் அற்புதமான ஒரு சேர்க்கை நிகழவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களின் செல்வம் தங்கமாகப் பெருகும் என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், […]
akshya triti

You May Like