தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
இந்த நிலையில் சென்னை – தேனாம்பேட்டை மையத்தில் வரிசையில் நின்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்.. வாக்குப்பதிவு மையத்தில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று குடும்பத்தினருடன் மு.க ஸ்டாலின் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.. முதல்வர் ஸ்டாலின் உடன் அவரின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, பேரன் இன்பநிதி ஆகியோரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” நான் ஜனநாயக கடமை ஆற்றியிருக்கிறேன்.. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. தமிழ்நாடு வெல்லும்..” என்று தெரிவித்தார்..
Read More : சாதனை அளவில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. பிரதமர் மோடி தமிழில் பதிவு..!



