தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. அவர்களில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.. தமிழ்நாட்டில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்..
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.. மேலும் 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்.. ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு..!



