தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலரும் வாக்குப்பதிவு செய்தனர்.. நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்..
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.. எனினும் ஓட்டுப் போடுவதற்கு முன் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க குவிந்த்தால் அனைவரும் தள்ளி செல்லும் படி கைகளில் சைகை காட்டினார்.. அனைவரும் தள்ளி சென்ற நிலையில் ரஜினி தனது வாக்கினை பதிவு செய்தார்.. அவருடன் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவும் தனது வாக்கினை பதிவு செய்தார்..
வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்..



