தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்..
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாக்குப்பதிவு செய்தனர்.. திரைப்பிரபலங்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, குஷ்பு, ஜோதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.. சில வாக்குச்சாவடி மையங்களில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது..
டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் 6 மணிக்கு மேல் வாக்களிக்கலாம்..
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கி உள்ளது.. இந்த பணி முடிந்த உடன் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்படும்.. இன்று பதிவான வாக்குகள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன.. வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : Breaking : தமிழ்நாட்டில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..! 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு..!



