Breaking : தமிழ்நாட்டில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..! 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு..!

voting

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..


முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாக்குப்பதிவு செய்தனர்.. திரைப்பிரபலங்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, குஷ்பு, ஜோதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழ்நாடிட்ல் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.. இவ்வளவு வாக்குகள் பதிவானது இதுவே முதன்முறையாகும்.. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 89.32% வாக்குகள் பதிவாகி உள்ளது.. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 73.44% வாக்குகள் பதிவாகி உள்ளன..

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆகும்.. மாலை 5 மணி நிலவரப்படி படி 4,71,60,321 வாக்குகள் பதிவாகி உள்ளன.. இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது..

முக்கிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம்

திருச்சி : 82.73%

நெல்லை : 74.65%

திருப்பூர் : 86.33%

திருவள்ளூர் : 80.70%

திருவண்ணாமலை : 83.71%

திருவாரூர் : 80.65%

வேலூர் : 85.06%

குமரி : 73.44%

தேனி : 78.79%

சென்னை : 81.34%

கோவை : 82.33%

தருமபுரி : 86.54

அரியலூர் : 83.06%

செங்கல்பட்டு : 82.41%

சேலம் : 88.02%

ஈரோடு : 87.59%

கிருஷ்ணகிரி : 82.40%

கோவை : 82.33%

RUPA

Next Post

கோலாகலமாக முடிந்த தேர்தல் திருவிழா.. 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு..!

Thu Apr 23 , 2026
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் […]
tamilnadu election 2026 updat

You May Like