Breaking : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! ஒரே நாளில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

jewel n

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 உயர்ந்து , ரூ.1.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. 

Read More : ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்..! கோடைக்காலக் கூட்ட நெரிசலைக் சமாளிக்க 18,262 சிறப்பு ரயில்கள்..!

RUPA

Next Post

காலையில் காபி அல்லது தேநீருக்குப் பதிலாக மோர் குடித்துப் பாருங்கள்.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்..!

Sat Apr 25 , 2026
நம்மில் பலரால் காலையில் எழுந்ததும் வயிற்றில் தேநீரோ அல்லது காபியோ இல்லையென்றால், நம்மில் சிலரால் எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. ஆனால், இந்த வழக்கம் அமிலத்தன்மை (acidity) போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அ தனால்தான், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் காஃபின் கலந்த பானங்களை அருந்துவதை விட, இயற்கையான மோர் அருந்துவதே உடலுக்கு அதிக நன்மை பயக்கும். காலையில் தேநீர் அல்லது காபிக்கு மாற்றாக வெறும் வயிற்றில் […]
Buttermilk

You May Like