Breaking : தமிழ்நாட்டில் மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! அரசு அதிரடி உத்தரவு..!

mayonnise

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் மயோனைஸ் ஒன்றாகும்.. முட்டையின் வெள்ளைக் கரு, எண்ணெய், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது.. சாண்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் என பல உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது..


இந்த உணவுப் பொருட்களுக்கு அதிக சுவையை கூட்டுவதும் மயோனைஸ் தான்.. ஆனால் ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸ் காரணமாக உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.. குறிப்பாக இந்த மயோனைஸில் சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக கூறப்பட்டது.. இதை தொடர்ந்து இந்த மயோனைஸுக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை கடந்த 8-ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் தற்போது அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.. பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் மீதான தடையை அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.. இதனால் மயோனைஸை விரும்பி சாப்பிடுவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..

Read More : கொளுத்தும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஜூஸ்..! இதை தினமும் குடித்தால் போதும்..!

RUPA

Next Post

நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா..? மாதத்திற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..? மேஜிக் ஃபார்முலா இது தான்..!

Sat Apr 25 , 2026
வாழ்க்கையில் ஒரு ‘கோடீஸ்வரராக’ மாற வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள். இருப்பினும், முறையான திட்டமிடல் இல்லாததால் இது சாத்தியமற்றது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால், ஒரு ‘முறையான முதலீட்டுத் திட்டம்’ (SIP) வாயிலாக, ஒழுக்கத்துடனும் தொடர்ச்சியாகவும் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்தால், நீங்கள் விரும்பும் இலக்கை எளிதாக அடையலாம். இப்போது, ​​10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளில் நீங்கள் எவ்வாறு 1 கோடி ரூபாய் என்ற […]
Money Rupees

You May Like