உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் பிரீத்தி(29). இவரது கணவர் சரவணன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரீத்தி திருமணத்திற்கு முன்பு கில்லோ என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. கில்லோ பல பெண்களுடன் பழகுவதை அறிந்த பிரீத்தி அவருடனான காதலை துண்டித்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கில்லோ காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் உல்லாச வீடியோக்களை ப்ரீத்திக்கு அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வீடியோக்களை லீக் செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் கில்லோவின் கொடுமையை தாங்க முடியாத பிரீத்தி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி டெல்லியில் இருந்த கில்லோவிடம் போன் செய்து தனிமையில் இருக்கலாம் ஹோட்டல் வா என கூறியுள்ளார்.
வீட்டில் இருந்து கிளம்பிய பிரீத்தி கத்தி மற்றும் சுத்தியலை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து பீர் அருந்திய நிலையில் பிரீத்தி தனது பையில் இருந்த கத்தியை எடுத்து கில்லோவின் கழுத்தை அறுத்து சுத்தியலால் தலையில் உயிர் பிரியும் வரை 15 முறை அடித்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து கிலோவின் செல்போனையும் அடித்து நொறுக்கி விட்டு தான் கொலை செய்து விட்டதாக ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மால்புரா காவல் துறையினர் கில்லோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரீத்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Read more: Voter ID தொலைந்தாலும் கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் வாக்களிக்கலாம்..!



