ஜனநாயகன் நஷ்டத்தை ஈடுசெய்ய புதிய படத்தில் கமிட் ஆகும் விஜய்..? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

vijay 2

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


முதலில் சில காட்சிகள் வெளியான நிலையில், பின்னர் முழு படமும் சமூக வலைதளங்களில் பரவியது. சைபர் குற்றப்பிரிவு உதவியுடன் லிங்குகள் நீக்கப்பட்டாலும், லீக் ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தியேட்டர் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், விஜய் சினிமாவுக்கு விடை கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற தகவல்கள் கோலிவுட்டில் பேசப்பட்டன. இந்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “படம் லீக் ஆனதால் நஷ்டம் உறுதி என்று இப்போதே சொல்ல முடியாது. பவன் கல்யாண் நடித்த படமும், பிரேமம் போன்ற படங்களும் ரிலீஸிற்கு முன் லீக் ஆனாலும், பின்னர் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. அதுபோல், ‘ஜனநாயகன்’ படத்தின் வசூல் நிலையைப் பார்த்தே அடுத்த முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மேலும், விஜய் மீண்டும் நடிப்பாரா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றும், தற்போது அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். படம் வெற்றி பெற்றால் அவர் சினிமாவுக்கு விடை கொடுக்கலாம்; இல்லை என்றால் தயாரிப்பாளருக்காக மீண்டும் நடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு மற்றும் அதன் வசூல் நிலை, விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரியமாக மாறியுள்ளது. அவர் பவன் கல்யாண் போல அரசியல் மற்றும் சினிமா இரண்டையும் சமநிலைப்படுத்துவாரா அல்லது முழுமையாக அரசியலுக்குச் செல்லுவாரா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read more: வெயில் மட்டுமல்ல.. கோடைக்காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் நுழைய இதுதான் காரணம்..! – நிபுணர் விளக்கம்

English Summary

Will Vijay commit to a new film to compensate for the loss of Janyayan? Producer reveals the truth..!

Next Post

Walking: தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்..? வயதுக்கு ஏற்ற சரியான நடை நேரம் இதுதான்!

Sun Apr 26 , 2026
How long should you walk daily? Age-wise guide to optimal health
Walking Routine

You May Like