விலையை கேட்டு மயங்கிடாதீங்க.. சபரீசன் அணிந்திருந்த வாட்ச் விலை பல கோடியாம்! ஸ்டாலின் மருமகன்னா சும்மாவா..?

sapareesan watch

சமீப நாட்களில் சமூக வலைதளங்களில் “சபரீசன்” குறித்து ஒரு பதிவு பெரிதும் வைரலாகி வருகிறது. அதில் அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் கைக்கடிகாரத்தின் மதிப்பு பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை என சில பதிவுகள் கூறியதால், பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதம் உருவாகியுள்ளது.


திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு அரசியல் சாராத குடும்பத்தைச் சேர்ந்தவர் சபரீசன். இவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தாமரை அரசியலில் எந்த ஆர்வமும் காட்டாமல் சென்னையில் அவர் நடத்தும் பள்ளியில் பிஸியாக இருக்கிறார்.

சபரீசனோ கடந்த பத்து ஆண்டுகளாக, தி.மு.க விற்காக தேர்தல் வேலைகளையும் பின்னிருந்து பார்த்து வரும் முக்கிய நபராக இருக்கிறார். ஆனால், இதுவரை  நேரடியாக எந்த அரசியல் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றதில்லை.  இதனால் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் விரைவாக சமூக வலைதளங்களில் கவனம் பெறுவது வழக்கமாக உள்ளது.

சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு பதிவு பெரிதும் பரவி வருகிறது. அதில் தமிழக அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சபரீசன் தேர்தல் வாக்குப்பதிவின் போது அணிந்திருந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருத கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் $1,59,974 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹1.5 கோடி ஆகும். சபரீசன் வாட்ச் விரும்பி எனவும், உலகில் எந்த மூளையில் விலை உயர்ந்த வாட்ச் இருந்தாலும் அதை உடனே வாங்குபவர் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Read more: ஆதார் அட்டை குறித்து மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்…! பிறந்த தேதி ஒரு சான்றாகச் செல்லாதா?

English Summary

The watch Sabarisan was wearing was worth crores! Is Stalin’s son-in-law just a fool..?

Next Post

ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்..! 1-ஆம் தேதி சம்பளம் வழங்கப்படாது..! காரணம் என்ன..?

Tue Apr 28 , 2026
மே 1-ஆம் தேதி தங்கள் சம்பளத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு, இம்முறை சற்று ஏமாற்றம் ஏற்படக்கூடும். இதற்குக் காரணம், அதே நாளில் தொழிலாளர் தினமும் (Labor Day) மற்றும் புத்த பூர்ணிமாவும் வருவதே ஆகும். இவ்விரு நாட்களிலும், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது இயல்பானதே. மே 1-ஆம் தேதி அரசு மற்றும் தனியார் வங்கிகள் இயங்காததால், சம்பளப் பரிசீலனை மற்றும் பணப் […]
money problems 11zon

You May Like