2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று பிரசாரங்களை மேற்கொண்ட நிலையில் களைப்பை போக்க சுற்றுலா தலங்களுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர்.
ஆனால், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அதிகாலையில் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் சார்பில் நடிகர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதே போன்று செந்தூர் முருகனின் நினைவாக அவருக்கு வேல் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சீரடி சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வருகை தந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் கோஷமிடவே விஜயை பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு மண்டியிட்டு சீரடி சாய்பாபாவை வழிபட்டார். நேற்று திருச்செந்தூர் முருகனை வழிபட்ட நிலையில் இன்று சீரடியில் சாய்பாபாவை தரிசித்தார்.
Read more: Ration Card | ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்கும்.. பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..!



