2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.. அந்த வகையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.. இதனால் எடப்பாடி தொகுதியில் இருந்து தவெக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.. அதாவது எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் இல்லை.. எனவே தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் 233 வேட்பாளர்கள் களமிறங்கினர்..
கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவியது.. மேலும் இந்த தேர்தலில் திமுக மீண்டும் பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறினாலும் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக புதிதாக களமிறங்கி உள்ளதால் விஜய் தாக்கம் எப்படி எதிரொலிக்கும், விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
இந்த நிலையில் வரும்-30ம் தேதி தவெக வேட்பாளர்களை சென்னையில் விஜய் சந்தித்து பேச உள்ளார்.. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் முடிந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார்.. எவ்வளவு வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும்? எந்த இடத்தில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது? என்னென்ன சவால்கள் இருந்தது..? என்பது குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.. இந்த சூழலில் 30-ம் தேதி தவெக வேட்பாளர்களுடன் விஜய் நடத்தும் ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..



