Breaking : ஹேப்பி நியூஸ்..! ஒரே நாளில் 2 முறை சரிவு.. ரூ.1600 குறைந்த தங்கம் விலை..!

jewels nn

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. 


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்தது.. இந்த சூழலில் இன்று மாலையும் தங்கம் விலை குறைந்துள்ளது..

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 குறைந்து ரூ.1.16,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..  

இன்று காலை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. 

Read More : 2026 தேர்தலில் தவெக வெற்றி பெறுமா..? விஜய் முதல்வர் ஆவாரா? பிரபல ஜோதிடரின் கணிப்பு..!

RUPA

Next Post

PPF Vs NPS.. அதிக வருமானம் பெற எதில் முதலீடு செய்ய வேண்டும்?

Wed Apr 29 , 2026
மத்திய அரசு பல சேமிப்புத் திட்டங்களை நடத்தி வருகிறது. வங்கி நிலையான வைப்புத்தொகைகளுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், பல வரிச் சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக, பலர் தங்கள் பணத்தை மத்திய அரசின் சேமிப்புத் திட்டங்களில் சேமிக்கின்றனர். இவற்றில் மிகவும் பிரபலமான திட்டங்கள்… பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். இப்போது, இவற்றில் எதில் […]
gaf33b380bd193274f5addd948a656320d4388d2113370a150 1736331295741 1738746786053

You May Like