Breaking : தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்.. அப்ப தவெக..? எக்ஸிட் போல் முடிவுகளில் ட்விஸ்ட்..!

MK Stalin EPS Vijay

தமிழ்தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவியது..


தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது..
குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது..

இந்த நிலையில் மேற்குவங்காளத்தில் நடைபெற்ற கடைசிக் கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன..

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்ல அதிக வாய்ப்பு என CNN News 18 கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.. திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இழுபறி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

CNN News 18 கருத்துக்கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி : 103-113

அதிமுக கூட்டணி : 114 முதல் 124

தவெக – 04 -10

நாம் தமிழர் – 0

RUPA

You May Like