மாமல்லபுரத்தில் விடுதியை புக் செய்த தவெக..! வேட்பாளர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை..!

vijay tvk 2

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வாரிக் குவித்து, அசுர பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது.. வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக பூஞ்ச்ஏரி தனியார் விடுதியை அக்கட்சி புக் செய்திருக்கிறது.. முன்னதாக வெற்றி பெற்ற உடனேயே அனைவரும் பனையூர் வர வேண்டும் என்று ஏற்கனவே விஜய் கூறியிருந்தார்.. அதன்படி அனைத்து தவெக வேட்பாளர்களும் சென்னை விரைந்து வர உள்ளனர்..


100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகிக்கிறது.. எப்படியும் மெஜாரிட்டி கிடைக்கும் என தவெக நம்புகிறது.. ஏனெனில் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாகவே உள்ளதால், வெற்றி நிலவரம் மாறக்கூடும்..

இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை சந்தித்து அடுத்தக்கட்ட ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை விஜய் மேற்கொள்ள உள்ளார்.. இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் ஒரு தனியார் விடுதியை தவெக தலைமை முன்பதிவு செய்துள்ளது.. அந்த விடுதியில் தான் விஜய் பல்வேறு அரசியல் சந்திப்புகளை நடத்தி உள்ளார்.. அந்த வகிஅயில் இந்த சந்திப்பு அந்த குறிப்பிட்ட தனியார் விடுதியில் தான் நடக்கப் போகிறது..

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிட ஆதிக்கத்தை தவெக தலைவர் விஜய் உடைத்துள்ளார்.. எனினும் தவெவுக்கு தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா..? அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது மெஜாரிட்டியை பொறுத்தே தெரியவரும்..

இந்த சூழலில் மகாபலிபுரம் விடுதியில் தனது எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆலோசனை நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பதர்கான உரிமை கோருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளது.. மேலும் அமைச்சர்கள் யார் யார்..? சபாநாயகர் யார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது..

Read More : “இது நம்ம சர்க்கார்” 1 கோடி வாக்குகளைக் கடந்து தவெக புதிய சாதனை..! சொல்லி அடித்த விஜய்..

RUPA

Next Post

BIG BREAKING| கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி.. 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி..!

Mon May 4 , 2026
BIG BREAKING | Stalin loses in Kolathur.. TVK candidate wins by a margin of 9 thousand votes..!
MK Stalin dmk 5

You May Like