BIG BREAKING| கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி.. 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி..!

MK Stalin dmk 5

கொளத்தூர் தொகுதியில் 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ் பாபுவிடம் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார்.


ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி இருந்தாலும், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி தவெக 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக 57 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

இதில் முக்கியமாக, சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்துள்ளார்.

2011 தேர்தலில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் வி.எஸ். பாபு. திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன் பின் தவெகவில் இணைந்தார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, அண்ணா நகர் சிற்றரசு உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளிலும் கடும் பின்னடைவு நிலவி வருகிறது.

Read more: மாமல்லபுரத்தில் விடுதியை புக் செய்த தவெக..! வேட்பாளர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை..!

English Summary

BIG BREAKING | Stalin loses in Kolathur.. TVK candidate wins by a margin of 9 thousand votes..!

Next Post

Breaking : பெரம்பூர், திருச்சி கிழக்கு விஜய் வெற்றி..! எவ்வளவு வாக்கு வித்தியாசம்..?

Mon May 4 , 2026
தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் 106 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 76 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட்ட […]
vijay 1

You May Like