தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட்ட நிலையில், 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது 1,12,20,014 வாக்குகள் (22.8%) பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கடுத்து திமுக 1,01,34,027 வாக்குகள் (20.8%), அதிமுக 87,72,783 வாக்குகள் (18%), நாம் தமிழர் கட்சி 12,05,039 வாக்குகள் (2.5%) பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
காலை நேரத்தில் திமுக முன்னிலை வகித்த நிலையில், அது நீடிக்காமல் சில மணி நேரங்களிலேயே தவெக முன்னிலைப் பெற்றது. தற்போது தமிழக அரசியல் களம் “TVK vs ADMK” என்ற கடும் போட்டியாக மாறி, திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சில முக்கிய தொகுதிகளில் அதிர்ச்சி திருப்பங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Read more: பின்தங்கிய திமுக.. களையிழந்த அண்ணா அறிவாலயம்.. தேம்பி தேம்பி அழுத தொண்டர்..!! வீடியோ வைரல்..



