நிலையான ஆட்சி.. மு.க.ஸ்டாலினுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்..! திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

stalin dmk n

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.. அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.. 


தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்த நிலையில், தவெகவின் பலம் 108-ல் இருந்து 113ஆக உயர்ந்தது. எனவே ஆட்சியமைக்க விஜய்க்கு இன்னும் 5 இடங்கள் தேவை.. இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விஜய் கடிதம் எழுதியிருந்தார்.. எனினும் விஜய்க்கு ஆதரவளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.. மேலும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அக்கட்சிகள் அறிவித்தன..

ஒருபுறம் தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், மறுபுறம் திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கப் போவதாக ஒரு தகவல் நேற்று முதல் பரவி வருகிறது..

இந்த பரபரப்பான சூழலில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி, கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. நிலையான ஆட்சி அமைய முடிவெடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

மதவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Read More : பாஜகவை எதிர்க்கும் துணிவும் உறுதியும் விஜய்யிடம் உள்ளதா..? விசிகவின் ஆளூர் ஷநவாஸ் கேள்வி..!

RUPA

Next Post

அடுத்த பத்தாண்டுகளில் மறைந்துபோகக்கூடிய பொருட்களின் பட்டியல் இதோ..!

Thu May 7 , 2026
தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. நேற்றைய அற்புதங்கள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. நாளைய கண்டுபிடிப்புகள் இன்றைய தேவைகளை மாற்றுகின்றன. 2030-ஆம் ஆண்டிற்குள், இன்று நாம் பயன்படுத்தும் பல அத்தியாவசிய தொழில்நுட்பங்கள் முற்றிலுமாக மறைந்துவிடும் வாய்ப்புள்ளது. புதுமைகளின் எழுச்சி நமது வாழ்க்கை முறை, பணம் செலுத்தும் முறைகள் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும். குறிப்பாக, பௌதீகப் பொருட்களை விட டிஜிட்டல் அனுபவங்கள் அதிகளவில் முன்னுரிமை பெறும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் […]
technology

You May Like