தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது.. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ – மாணவிகள் எழுதினர்.. இவர்களின் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது..
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது.. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது..
அதன்படி தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.. சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது, கன்னியாகுமரி 3-ம் இடம் பிடித்துள்ளது..
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 93.19%, மாணவிகள் 97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இந்த முறையும் +2 தேர்வில் மாணவர்களை விட 3.81% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.17% உயர்ந்துள்ளது..
அரசுப் பள்ளிகள் 92.16%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.72% தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது.. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்..
பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய்வற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்..
பள்ளி, மாணவர்களுக்கு அவர்கள் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வலர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்..
Read More : திமுக – அதிமுகவும் இணைந்தால்.. தவெக போட்ட மெகா பிளான்… தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!



