திமுக – அதிமுகவும் இணைந்தால்.. தவெக போட்ட மெகா பிளான்… தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!

MK Stalin EPS Vijay

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..


எனினும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இதற்காக தவெக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.. எனினும் எந்த முடிவு ஏற்படாமல் உள்ளது..

இந்த சூழலில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.. இதையடுத்து தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் கவர்னர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்..

ஆனால் விஜய்யை ஆட்சியமைக்க வரும் படி, ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.. ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் விஜய் வரும் ஆளுநர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது…

ஆனால், விஜய் ஆட்சியமைக்க இடையூறு செய்யமாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.. இதனிடையே திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.. ஆனால், திமுக அதிமுகவும் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது..

இந்த சூழலில் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தால், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.. அதற்கேற்ப கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது..

அப்படி இல்லாமல், திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க கோரினால் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தவெக எச்சரித்துள்ளது..

RUPA

Next Post

Breaking : தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..! 95.20% தேர்ச்சி.. எந்த மாவட்டம் முதலிடம்..?

Fri May 8 , 2026
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது.. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ – மாணவிகள் எழுதினர்.. இவர்களின் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது.. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் […]
School Exam 2025

You May Like