தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.. எனவே விஜய் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைத்துவிட்டது..
இந்த சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திக்க புறப்பட்டார்.. ஆனால் ஆளுநரிடம் நேரம் கேட்காமல் விஜய் புறப்பட்ட நிலையில், விஜய்க்கு ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி செண்ற கார் விஜய்யின் கார் யூ டர்ன் போட்டு வீட்டுக்கு திரும்பியது.. இதனால் ஆளுநரை சந்திகாமலேயே விஜய் வீட்டிற்கு புறப்பட்டார்.. எனவே முதலமைச்சராக பொறுப்பதில் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..



