விளையாட்டு வீரர்களுக்கு பரோடா வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!

job

விளையாட்டு துறையில் சாதனை படைத்த இளைஞர்களுக்கு அரசு வங்கியில் பணிபுரியும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. பரோடா வங்கி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த அறிவிப்பின் படி, Clerical Cadre பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பின் மூலம் அரசு வங்கி துறையில் பணியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ஆரம்பத்திலேயே மாதம் 25,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை படி (HRA) உள்ளிட்ட பல்வேறு அரசு வங்கி சலுகைகளும் வழங்கப்படும். நிரந்தர அரசு வங்கி வேலை என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேவையான திறன் மதிப்பீட்டு செயல்முறைகளும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 12, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் Bank of Baroda Official Website மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: கருணாநிதியின் மஞ்சள் துண்டு.. MGR-ன் தொப்பி.. விஜயின் கருப்பு கோட்.. தமிழக முதலமைச்சர்களின் ஆடை பின்னணி ஒரு பார்வை..!

English Summary

Jobs for athletes in Bank of Baroda.. Tomorrow is the last date to apply..!

Next Post

'தங்கம் வாங்காதீங்க..' பிரதமர் மோடியின் கருத்தால் நகை பங்குகள் வீழ்ச்சி.. 1 கோடி வேலைவாய்ப்புகள் ஆபத்தில்..? - நகை கவுன்சில்

Mon May 11 , 2026
PM Modi's appeal on gold could hit 1 crore jobs: Jewellery council
jwell council leader

You May Like