“சபாநாயகர் பதவி என்றாலே பயந்து ஓடிவிடுவார்கள்..” சட்டப்பேரவையில் CM விஜய் சொன்ன சுவாரஸ்ய வரலாறு..!

vijay n

சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் இன்று தேர்வானார்.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் முதல்வர் விஜய் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.. மேலும் ” இந்த ஆட்சியில் அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமையும்.. சட்டப்பேரவையில் அனைவரும் சமம் தான்.. அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் சமமாகவே ஏற்கப்படும்.. ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும்.. நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்படும்..


இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்திலேயே பாராளுமன்றம் செயல்பட்டது.. இங்கிலாந்தை போன்ற நமது பாராளுமன்ற முறையும் இயங்கி வருகிறது.. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார்.. பாராளுமன்றமும் இயங்கியது.. மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்பும் போது பாராளுமன்றம் அதை நிராகரிக்கும். பாராளுமன்ற கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் சபாநாயகர்.. அதற்கு துணிவு வேண்டும்..

சில பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர அந்த ராஜ்ஜியத்தின் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை வழங்கும் உரிமை மன்னருக்கு இருந்தது.. தான் விரும்பிய்தை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் சபாநாயகருக்கு மரண தண்டனை விதிக்கும் படி மன்னர் ஆணையிடுவார்.. தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள்.. இது பல முறை நடந்ததால் யாருமே சபாநாயகர் பதவிக்கு வர விரும்பமாட்டார்கள்..

எனவே புதிதாக பாராளுமன்றம் அமைந்த உடன் சபாநாயகர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்ட உடன் தலை தப்பித்தால் போதும் என்று ஓடிவிடுவார்.. அவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர் கைகளை பிடித்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள்.. இதுதான் அந்த காலத்தில் இருந்த மரபு.. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இந்த மரபு தொடர்கிறது.. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

"முதலமைச்சரும் நானும் ஒரே காலேஜ் தான்.. ஆனால் நாங்கள் தான் சீனியர் பேட்ஜ்..!" - உதயநிதி பேச்சால் சிரித்த விஜய்!

Tue May 12 , 2026
"The Prime Minister and I are from the same college.. but we are the senior badge..!" - Vijay laughed at Udhayanidhi's speech!
udhay 3

You May Like