திருச்சி கிழக்கில் போட்டியா..? நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடருமா..? முடிவை சொன்னார் திருமா..!

vijay thiruma 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன..


முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் கூறிவந்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது.. இதையடுத்து திமுக தரப்பு விசிகவை கடுமையாக விமர்சித்தது. திமுக எம்.பி. ஆ.ராசா, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்..

இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமா நிற்க வேண்டும் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் என்று கூறப்பட்டது.. எனவே திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் விலகியது குறித்தும் தவெக அமைச்சரவையில் இணைந்தது குறித்தும் விசிக தலைவர் திருமவளவன் விளக்கம் அளித்தார்.. அப்போது திருச்சி கிழக்கில் போட்டியிட விருப்பமா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமா “ அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று தவெக தரப்பில் வலியுறுத்தினார்கள்.. நான் அதில் உடன்பாடு இல்லை என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன்.. இப்போது அந்த உடன்பாட்டி தான் இருக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

தவெக உடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ அரசியல் சூழலுக்கு ஏற்ப அமைச்சரவையில் பங்கேற்க முடிவு செய்தோம்.. அடுத்த வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் குறித்து எதையும் தவெக உடன் பேசவில்லை.. அதை தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம்.. “ என்று கூறினார்..

RUPA

Next Post

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இளநீர் குடிக்க இதுவே சரியான நேரம்..!

Sat May 23 , 2026
Let us explore the wonderful changes that occur in the body when tender coconut water is consumed at different times of the day.
benefits of tender coconut water 1

You May Like