இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி.. சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணியை காட்டமாக விமர்சித்த அதிமுக..!

palaniswami edappadi k pti 1200x768 1

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்..


சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் குழப்பத்திற்கு விளக்கம் அளித்த சி.வி.சண்முகம், ” அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதிமுகவை காப்பாற்றப்பட வேண்டும். திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் எதிர்த்த திமுக உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக இபிஎஸ் திட்டம் இட்டார். அதற்கு நாங்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் அதிமுக தலைமை சி.வி. சண்முகம், எஸ்.பி வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் ” சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்? 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!

இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!” என்று தெரிவித்துள்ளது..

Read More : “சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் தான் மெஜாரிட்டி.. இதுவே மக்களின் தீர்ப்பு..!” – திமுக தலைவர் ஸ்டாலின் X பதிவு..

RUPA

Next Post

எலுமிச்சை சாறு + சியா விதை.. உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சூப்பர் பானம்..! எக்ஸ்ட்ரா நன்மைகள் என்னென்ன தெரியுமா..?

Tue May 12 , 2026
Lemon juice + chia seeds.. A super drink that helps you lose weight fast..! Do you know what the extra benefits are..?
lemon siya

You May Like