சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் தான் பெரும்பான்மையாக உள்ளதாக, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read more: அண்ணா முதல் விஜய் வரை: 7 முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை..! யார் தெரியுமா..?



