தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்..
இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. மேலும் சி.வி. சண்முகம் அணி எம்.எல்.ஏக்களையும் விஜய் சந்தித்தார்..
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.. அப்போது வாசலில் காத்திருந்த திருமாவளவன் விஜய்யை வரவேற்று அழைத்து சென்றார்.. அப்போது விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற திருமாவளவன், விஜய்க்கு அரசமைப்பு சட்ட முகப்புரை அடங்கிய புகைப்படத்தை திருமாவளவன் பரிசாக வழங்கினார்..



