“ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்க..” நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து திமுக வெளிநடப்பு.. உதயநிதி அறிவிப்பு..!

udhayanidhi assembly

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 4 கோடியே 93 லட்சம் பேர் வாக்களித்தனர்.. தற்போதைய ஆளுஅங்கட்சிக்கு 1 கோடியே 72 லட்சம் பேர் தான் வாக்களித்தனர்.. மீதம் இருக்கும் சுமார் 3 கோடி 71 லட்சம் பேரும் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. சுமார் 65 சதவீதம் பேர் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது..


நமது சட்டமன்றம் 234 உறுப்பினர்களை கொண்டது.. மெஜாரிட்டிக்கான மேஜிக்கல் நம்பர் இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும்.. ஆட்சியில் இருக்கும் தவெகவுக்கு அந்த நம்பர் இல்லை.. மாண்புமிகு முதல்வர் தனது வெற்றி குறித்து நம்பிக்கை இல்லாததால் இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.. அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்துள்ளார்.. அந்த மக்களுக்கு இன்னும் முதல்வர் விஜய் நன்றி கூட சொல்லவில்லை.. இப்போது ஆளுங்கட்சிக்கு வெறும் 106 இடங்கள் தான் உள்ளது..

எங்கள் தலைவர் அமைத்த கூட்டணி தலைவர்களின் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.. குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாக கூறிவிட்டனர்.. உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரை அந்த கட்சியின் தலைவருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஆதரவு தர வைத்திருக்கிறீர்கள்..

நான் சொன்னது ரொம்ப டிசெண்ட் ஆன வெர்ஷன்.. தவெக கொண்டு வந்திருப்பது மாற்றம் இல்லை, துர்நாற்றம் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்..

பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது.. அதில் ஒரு பிரிவு தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.. பிளவுபட்ட தலைவர் ஒரு வீட்டுக்கு புதிய சோபா போகிறது.. பின்னாடியே புதிய முதல்வரும் போகிறார்.. புதுமையான ஆட்சி என்று சொல்லிவிட்டு புஷ்பா பட பாணியில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..

கட்சி தாவுவதற்கு முன்பே அவரின் வீட்டுக்கு போய் இவ்வளவு ஓப்பனாக இன்விடேஷன் கொடுப்பதை இதுவரை இந்தியாவிலேயே பார்த்தது இல்லை.. தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னீர்கள்.. ஊழல் சக்தியோடு சேர்ந்திருக்கும் ஆளுங்கட்சியை என்ன சொல்வது என்று மக்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.. இந்த அரசு எத்தனை நாள் நீடிக்கப் போகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது..

தேர்தல் நேரத்தில் மற்றும் சிலர் கட்சிகள் என்று விமர்சித்த தலைவர்களை முதல்வர் சந்தித்திருக்கிறார்.. இப்படி எங்கள் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், மற்றும் சிலர் கட்சியில் இருக்கும் தலைவர்களை கடன் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..

பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் இல்லாத இந்த அரசு நல்லாட்சி என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.. உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களே தவறு செய்துவிட்டோம் என்று நினைக்க தொடங்கிவிட்டனர்.. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்..

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவீர்கள்.. அப்படி வெற்றி பெற்ற பின் நாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களை அரசியல் பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Breaking : நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது..! சட்டமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபித்தார் விஜய்..!

Wed May 13 , 2026
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.. பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.. தமிழ்நாட்டின் முதல்வர் சி. […]
vijay assembly n

You May Like