இலங்கைக்கு 258 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் (ED) சென்னை மற்றும் இராமநாதபுரம் முழுவதும் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டது
இந்த கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி ஜான் பிரிட்டோ எனத் தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டோ போதைப்பொருட்களைப் பெற்று, இலங்கை கடல் மார்க்கமாக இயங்கும் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி அவ்பொருட்களைக் கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இந்த ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவ அர்ஜூனாவின் உறவினர் என்று கூறப்படுகிறது.. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதால் தான் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் திமுக ஐடி விங் இது குறித்து தவெக அரசை காட்டமாக விமர்சித்துள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் ” பிரிட்டோ தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து தொலைவிலிருந்து இந்தக் கும்பலை இயக்கி வருவதாகவும் புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர். சமீபத்திய சோதனைகளின் விளைவாக, போதைப்பொருள் வருமானத்தை சட்டவிரோதமாகப் பணமாக்கியது தொடர்பான குற்றத்தை நிரூபிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட ‘ஜான் பிரிட்டோ’, தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
‘தூய சக்தி’ போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் ‘போதை சக்தியாக’ மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை ‘தமிழ்நாட்டின் மீட்பர்’ என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள ‘இன்ஃப்ளூயன்சர்கள்’, இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது..
Read More : ஜோசப் விஜய் எனும் பொம்மை முதல்வர்.. இதுதான் உங்க மத நல்லிணக்க அரசியலா..? விளாசிய நயினார் நாகேந்திரன்..!



