” நடிகர் அஜித்திற்கும் முதலமைச்சராகும் யோகம் இருக்கு.. ஆனால்..” விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பரபரப்பு பேட்டி..!

ajith astrologer

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியானம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர் தான் ரத்தன் பண்டிட். ஆரம்பத்தில் “வெற்றிவேல்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ரதன் பண்டிட் என மாற்றியதாக கூறப்படுகிறது..


இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீக ஆலோசகர் எனவும், 1991 தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தவர் ஆவார். அந்த வகையில், விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என முன் கூட்டியே கணித்திருந்தார். விஜய் திருச்செந்தூர் கோயிலுகு சென்றபோது அவருடன் காரில் ரதன் பண்டிட் பயணம் மேற்கொண்டார்..

இந்த சூழலில் முதல்வர் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.. இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்க வெளியிட்டிருந்தார்..

எனினும் இந்த நியமனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.. ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா..? அவர் எப்படி அரசியல் ஆலோசனைகளை வழங்குவார் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது.. இதையடுத்து முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை நியமித்து பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது..

இந்த நிலையில் ரத்தன் பண்டிட் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் ” முதலமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் நான் முதல்வர் விஜய்யையும், அஜித் சாரையும் தொடர்பு கொண்டேன்.. அஜித் சாருக்கும் முதலமைச்சராகும் யோகம் உள்ளது.. ஆனால், அவர் அதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.. முதல்வர் விஜய்யின் ஜாதகத்தின் படி, அஜித் சார் போட்டிக்கு வரமாட்டார்.. விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு.. 100 வருடம் கடந்து அவர் வாழ்வார்..” என்று தெரிவித்தார்..

Read More : “இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல..” சனாதனம் குறித்த பேச்சுக்கு உதயநிதி விளக்கம்..!

RUPA

Next Post

வெறும் ரூ. 55 மட்டுமே.. மோடி அரசிடமிருந்து மாதம் ரூ. 3000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்..!

Fri May 15 , 2026
உங்களுக்கு ஒரு தனியார் வேலை இல்லாவிட்டாலும் அல்லது வருங்கால வைப்பு நிதி (PF) வசதி இல்லாவிட்டாலும், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டத்தின் மூலம், நீங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 வரை ஓய்வூதியம் பெறலாம். சிறிய அளவிலான மாதத் தவணைகளைச் செலுத்துவதன் மூலம், 60 வயது நிறைவடைந்த பிறகு […]
Pm Modi and money

You May Like