Flash: மாலையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்கள் ஹேப்பி..! ஒரு சவரன் எவ்வளவு..?

gold price nn

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது பொதுமக்களை கவலைக்குள்ளாக்கி வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு, பணவீக்கம் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதும் போக்கு ஆகியவை விலையைக் கடுமையாக பாதித்து வருகின்றன.


கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை, அதன் பிறகு குறையவே இல்லை. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆக விற்பனையானது. சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாளின் தொடர்ச்சியில் விலை மேலும் குறைந்ததால் நகைப்பிரியர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120-க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் மொத்தமாக ரூ.2,280 வரை தங்கம் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3.05 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: Flash: வரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு..!

English Summary

Gold Rate: Gold prices drop again in the evening.. Jewelry lovers happy..! How much is a razor..?

Next Post

Flash: டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. பணியாளர்களின் நிலை என்ன..? சென்னையில் பரபரப்பு..!

Fri May 15 , 2026
Terrible fire at Tech Mahindra premises..
ch fire

You May Like