Flash: டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. பணியாளர்களின் நிலை என்ன..? சென்னையில் பரபரப்பு..!

ch fire

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன எலெக்ட்ரிக்கல் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தகவலின்படி, டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவி, குடோன் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது குடோனில் இருந்த பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ மளமளவென பற்றி வான் முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more: Flash: வரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு..!

English Summary

Terrible fire at Tech Mahindra premises..

Next Post

" பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைத்திடுக.." தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்..!

Fri May 15 , 2026
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]
vijay eps

You May Like