நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.. இந்த தம்பதிக்கு 2 மகன்களும் இருக்கிறார்கள்.. சூழல் இப்படி இருக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவித்தார்.. இதை தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருந்தார்.. ஆனால் நேற்று வீடியோ வெளியிட்ட கெனிஷா தான் சென்னையை விட்டு வெளியேறுவதாக கூறியிருந்தார்..ச்
இந்த நிலையில் ரவி மோகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது ” மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை படத்தை வெளியிடப்போவதில்லை.. எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடன் எனக்காக நின்றவர் கெனிஷா.. என்னுடன் இருந்த தோழியை அனுப்பிவீட்டீர்கள்.. மிக்க மிக்க நன்றி.. என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்..
சம்பாதித்து கொடுத்த நான் வாடகை வீட்டில் உள்ளேன்.. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.. அழகுக்காக செல்பவன் என்றால் எப்போதே சென்றிருப்பேனே..? எனது குழந்தைகளை கூட பார்க்க விடுவதில்லை.. அனைத்தையும் என் பிள்ளைகளுக்காகவே சகித்துக்கொண்டிருந்தேன்.. என் பிள்ளைகள் மீதான கேள்விக் கேட்காதீர்கள்.. தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..” என்று கண்ணீர் விட்டு கதறினார்..
தொடர்ந்து பேசிய ரவிமோகன் ஆன்லைனில் ஆபாசமாக பேசும் நபர்களை ஆவேசமாக சாடினார்.. ” பிளாக்மெயில் செய்து என்னை அடிமையாக வைத்திருந்தனர்.. என்னை பிளாக்மெயில் செய்து தான் திருமணம் செய்தனர்.. கையை அறுத்துக் கொண்டு தான் ஆர்த்தி என்னை திருமணம் செய்தார். என் விருப்பப்படி படம் நடிக்கக் கூட என்னை அனுமதிக்கவில்லை.. ஆனால் அவர்கள் அம்மா தயாரிப்பு நிறுவனத்திற்காக மட்டுமே நான் படம் நடிக்க வேண்டும் என்று நினைத்தனர்..
என் தோழிக்காக நான் இன்று செய்தியாளர்களிடம் பேசவில்லை.. அவர் எங்கிருந்தாரும் நன்றாக இருப்பார்.. எனக்கு நடந்த பல விஷயங்களை பற்றி பேசவே இன்று உங்களிடம் பேசுகிறேன்.. அமைதியாக இருப்பேன், எதுவும் செய்யமாட்டேன் என நினைக்கிறார்கள், நான் பேசாமல் இருந்ததே தவறு.. குழந்தைகள் மீது பாசம் இல்லை என சொல்கிறார்கள்.. என் குழந்தைகள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்..
நான் வாயை மூடிக் கொண்டு இருந்ததால் என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டனர்.. ஒரு போலியான இமேஜை நினைத்து நான் சும்மா இருக்க வேண்டுமா..? நான் உயிரோடு இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர்.. ஆனால் உங்கள் எல்லோரையும் அனுப்பிவிட்டு தான் நான் செல்வேன்.. என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்.. இனி நான் சாதுவாக இருக்கப் போவதில்லை..” என்று தெரிவித்தார்..



