fbpx

Srilanka: மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை…!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை. மேலும் கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமிபத்தில் கேள்வி எழுப்பியது.

Vignesh

Next Post

Warning: தமிழகத்தில் ஊரடங்கா?... சுட்டெரிக்கும் வெயில்!… பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Sun Mar 10 , 2024
Warning: வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வெயில் மே முழுவதும் வாட்டி வதைக்க தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதமே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. சரியாக சொல்வதெனில் பிப்ரவரி இறுதியிலிருந்தே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தென்னிந்தியாவும் சரி, வட இந்தியாவும் சரி ஒட்டு மொத்த நாடே வெயிலால் கடுமையான அவஸ்தையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் […]

You May Like