Annamalai: தமிழகத்தில் இடது, வலது, மய்யம் என, மூன்று புள்ளிகளையும் இணைக்கும் புள்ளியாக, பா.ஜ., மட்டுமே உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில், . அரசியல் மாற்றத்தை விரும்பும் பெண்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அனைவரும் பா.ஜ., பக்கம் வர வேண்டும் என்று கூறினார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, ஜாபர் சாதிக் பற்றிய செய்தியில் படத்தயாரிப்பாளர் என, குறிப்பிடப்படுகிறது. ஒரு ஜாபர் சாதிக்கை மட்டும் பிடித்து விட்டால் போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க முடியாது. இதுபோன்று உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் அரசு மதுக்கடைகளையும் மூட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் ராஜினாமா செய்வது புதிதல்ல. அத்துடன், அருண் கோயல் ஏற்கனவே விருப்ப ஓய்வில் சென்றவர் தான். இந்த நிலையில் அருண் கோயல், எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை அவரே கூறாத நிலையில், மற்றவர்கள் அதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று அண்ணாமலை கூறினார்.
Readmore:DMK: ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்தி பேசினால் கிரிமினல் வழக்கு…! எம்.பி அதிரடி