தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. இந்த சூழலில், நேற்று இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது..
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு கடிதம் கொடுத்தனர்.. மொத்தம் உள்ள 78 மாவட்ட செயலாளர்களில் 75 பேர் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்..
இபிஎஸ் என்ன முடிவை எடுத்தாலும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் முழு ஆதரவு தருகிறோம் என்று உறுதியளித்துள்ளனர்.. விழுப்புரம் மாவட்டத்தில் தோற்ற சி.வி. சண்முகத்தை மாநிலங்களவை எம்.பி.யாக்கியவர் இபிஎஸ்.. சி.வி. சண்முகம் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்.. ஆனால் அவருக்கு மீண்டும் பதவி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. சி.வி சண்முகம் தனது சுயநலத்திற்காக அதிமுகவை அழிக்கிறார்.. விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைய சி.வி. சண்முகம் தான் காரணம்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சி.வி சண்முகம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்.. அவை உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள்.. திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி 98,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. இபிஎஸ் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கட்டுப்படுவர்.. ” என்று தெரிவித்தார்..



