நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 75 இடங்களில் வெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 55 கூட்டணி இடங்களிலும் வெற்றி பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது..
ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இன்று பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தவெகவின் முன்னணி நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை முதல்வர் விஜய்யே அழைத்து சென்று அவர்களின் இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்..
அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் இருக்கையில் ஆதவ் அர்ஜூனாவை அமர வைத்து முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பேனா கொடுத்து வாழ்த்திய முதல்வர் விஜய்க்கு, ஆதவ் அர்ஜூனா புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. அப்போது அரசு உயரதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்..



