தமிழக அமைச்சரவையில் திருமா..? முதல்வர் விஜய்யின் அதிரடி மூவ்..! பரபரக்கும் அரசியல் களம்..!

Vijay and Thirumavalavan

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 75 இடங்களில் வெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 55 கூட்டணி இடங்களிலும் வெற்றி பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது..


ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.. இதற்கான ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.. இந்த விஷயத்தில் வெளியில் இருந்து ஆதரவு தரும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக மேற்சொன்ன 4 கட்சிகளும் அறிவித்தன.. மேலும் அமைச்சரவையில் பங்குபெறமாட்டோம் என்றும் கூறிவிட்டனர்..

ஆனால் இந்த கட்சிகளை அமைச்சரவைக்குள் கொண்டு வந்தால் ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும் என்று தவெக கருதுகிறது.. எனினும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அமைச்சரவையில் பங்குபெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றன.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்துள்ளன..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளன், “ அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து மீண்டும் உயர்நிலை குழுவை கூட்ட வேண்டிய அவசியமில்லை.. இருந்தாலும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட சில முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேச வேண்டிய தேவை உள்ளது.. இந்த அழைப்பை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படையில் கலந்து பேசி விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்..” என்று தெரிவித்தார்..

ஏற்கனவே உயர்நிலை குழுவில் அமைச்சரவையில் பங்கெடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தாலும், தற்போது மீண்டும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. எனவே தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

இது உண்மையாகும் பட்சத்தில் அமைச்சரவையில் யாருக்கு இடம் என்ற கேள்வியும் எழுகிறது.. விசிகவுக்கு வன்னி அரசு, ஜோதி மணி ஆகிய 2 இரண்டு எம்.எல்.ஏக்க உள்ளனர்.. இதில் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால் இதை முதல்வர் விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது..

முதல்வர் விஜய்யை பொறுத்த வரை திருமாவளவனை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.. திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என்றும் கூறி வருகிறாராம்.. ஆனால் திருமாவளவனோ என்ன முடிவெடுப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளாராம்..

அதாவது அமைச்சரவையில் சேரலாமா அல்லது விசிகவின் 2 எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்கலாமா என்பது குறித்து திருமா யோசித்து வருகிறாராம்.. கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளது என்று கருதியே திருமா, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட நினைத்தார்.. ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்..

ஆனால் தற்போது முதல்வர் விஜய்யே, திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.. அதனால் தான் திருமா தீவிரமாக யோசித்து வருகிறார் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.. எனவே திருமா அமைச்சரவையில் இணைவாரா? அல்லது எம்.பியாகவே தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Read More : ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர்.. CM விஜய் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? டிடிவி தினகரன் காட்டமான கேள்வி..!

English Summary

It is reported that there is a strong likelihood of the VCK securing a place in the DMK-led cabinet. Consequently, anticipation regarding who from the VCK will become a minister has intensified.

RUPA

Next Post

நெல்லையில் பெற்றோர் கூட்டம் கூட்டமாக செல்லும் இந்த அம்மன் கோவில் பற்றி தெரியுமா..?

Thu May 21 , 2026
Do you know about this Amman temple in Nellai that parents visit in droves?
Pittapurathi 1

You May Like