Flash : ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.5000 உயர்வு..! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

jewel 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. 


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது.. ஆய்வுகளால் எழுந்த சர்ச்சை.. அமைச்சர் ஆனந்த் அதிரடி உத்தரவு..!

RUPA

Next Post

CM Vijay Salary: கோடிகளை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விஜய்..! முதல்வராக மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Fri May 22 , 2026
CM Vijay, who came to politics after spending crores..! Do you know how much is his monthly salary?
cm vijay n 1

You May Like