தவெகவில் சாதி பார்த்து பதவி வழங்கப்படவில்லை.. பிராமணர் சர்ச்சை.. அமைச்சர் ரமேஷ் பதில்..!

minister ramesh

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.. இதன் மூலம் தமிழகத்தில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது..


தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.. அதே போல் 4 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றனர்..

இந்த அமைச்சர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.. ரமேஷ் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.. இது பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பி உள்ளது..

இந்த நிலையில் அறநிலையத்துறைக்கு பார்ப்பனர் அமைச்சர் என்ற விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார்.. எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான்.. சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.. மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

Read More : முதல்வர் விஜய் கொடுத்த சூப்பர் ஆஃபர்..! எவ்வளவோ சொல்லியும் திட்டவட்டமாக NO சொன்ன திருமா..!

RUPA

Next Post

Flash : குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!

Sat May 23 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold jewelery

You May Like